மாவட்டத்தில், இந்த மாத இறுதி வரை கால்நடை சந்தைகளுக்கு தடை - கலெக்டர் பிரபாகர் உத்தரவு


மாவட்டத்தில், இந்த மாத இறுதி வரை கால்நடை சந்தைகளுக்கு தடை - கலெக்டர் பிரபாகர் உத்தரவு
x
தினத்தந்தி 5 Dec 2018 4:30 AM IST (Updated: 5 Dec 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில், இந்த மாத இறுதி வரை கால்நடை சந்தைகளுக்கு தடை விதித்து கலெக்டர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும் கால்நடைகளுக்கு கோமாரி தொற்று நோய் ஏற்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கால்நடை சந்தைகளான ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஒரப்பம், குந்தாரப்பள்ளி, பாகலூர், கெலமங்கலம் ஆகிய 6 சந்தைகளில் கோமாரி நோய் பாதிக்கப்பட்ட பிற மாவட்டங்களிலிருந்து வரும் நோய் தாக்கப்பட்ட கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருவதால் ஒரு கால்நடைகளிலிருந்து மற்ற கால்நடைகளுக்கு தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது.

மேலும் கால்நடை சந்தைகளில் இருந்து தொற்று நோய் உள்ள கால்நடைகளை கால்நடை வளர்ப்போர் வாங்கி வந்தால் மற்ற நல்ல நிலையில் உள்ள கால்நடைகளுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே தொற்று நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு, இந்த மாவட்டத்தில் உள்ள 6 கால்நடை சந்தைககளில் கால்நடைகளை விற்கவோ, வாங்கவோ இந்த மாத இறுதி வரை அனுமதிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story