மாவட்ட செய்திகள்

மகராஜகடை அருகே சரக்கு வேன் மீது கார் மோதி தொழில் அதிபர் பலி மனைவி படுகாயம் + "||" + Near the Maharaja The car hits a car crash on the cargo van The wife was injured

மகராஜகடை அருகே சரக்கு வேன் மீது கார் மோதி தொழில் அதிபர் பலி மனைவி படுகாயம்

மகராஜகடை அருகே
சரக்கு வேன் மீது கார் மோதி தொழில் அதிபர் பலி
மனைவி படுகாயம்
மகராஜகடை அருகே சரக்குவேன் மீது கார் மோதி தொழில் அதிபர் பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
குருபரப்பள்ளி, 

ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், பலமனேரி கல்லுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வனஜாசனா (வயது 63). தொழில் அதிபர். இவரது மனைவி கலாவதி. இவர்கள் பெங்களூருவில் உள்ள தங்கள் மகளை பார்த்து விட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை டிரைவர் அஞ்சவர்தன் என்பவர் ஓட்டி சென்றார்.

கிருஷ்ணகிரி அடுத்த மகராஜகடை அருகே கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது இவர்கள் சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் பலத்த காயமடைந்த வனஜாசனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கலாவதி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிரைவர் காயம் இன்றி தப்பினார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மகராஜகடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வனஜாசனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. லோடு ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதல்: மீன் வியாபாரி-டிரைவர் சாவு வல்லநாடு அருகே பரிதாபம்
வல்லநாடு அருகே நின்று கொண்டு இருந்த லோடு ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மீன் வியாபாரியும், டிரைவரும் பரிதாபமாக உயிர் இழந்தனர.
2. மோட்டார்சைக்கிள் மீது மினிவேன் மோதி தந்தை- மகள் பரிதாப சாவு 3 பேர் காயம்
திருச்செங்கோடு அருகே மோட்டார்சைக்கிள் மீது மினிவேன் மோதி தந்தை-மகள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
3. விபத்துக்கு வழிவகுக்கும் திருவாடானை– ஓரியூர் சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விபத்துக்கு வழிவகுக்கும் திருவாடானை –ஓரியூர் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. விழுப்புரம் அருகே மரத்தில் சரக்கு வாகனம் மோதல்; தொழிலாளி சாவு 7 பேர் காயம்
விழுப்புரம் அருகே மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் தொழிலாளி பலியானார். இந்த விபத்தில் மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
5. போளூரில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி
போளூரில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.