சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தற்கொலை வழக்கு: முன்னாள் துணைவேந்தர் உள்பட 15 பேருக்கு சம்மன்
சேலம் பெரியார் பல் கலைக்கழக பதிவாளர் தற்கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் உள்பட 15 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தோப்புபாளையம் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து. இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு யார் காரணம்? என்பது குறித்து அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே அங்கமுத்துவை தற்கொலைக்கு தூண்டியதாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன் உள்பட 7 பேர் மீது பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை சமீபத்தில் சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன் உள்பட 15 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதைத்தொடர்ந்து தற்போது ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story