மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு + "||" + Break the house lock and steal

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
வீட்டை பூட்டி விட்டு கணவன்- மனைவி 2 பேரும் சென்னையில் வசிக்கும் மகன் வீட்டிற்கு சென்றிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த பக்கத்து வீட்டுக்கார பெண் அதிர்ச்சியடைந்தார்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள கணபதி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகந்தராஜா(வயது 63). இவரது மனைவி மணிமேகலை. கடந்த 2-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு கணவன்- மனைவி 2 பேரும் சென்னையில் வசிக்கும் மகன் வீட்டிற்கு சென்றிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த பக்கத்து வீட்டுக்கார பெண் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் அறையில் இருந்த 2 பீரோக்களும் திறந்து கிடந்தன. இதையடுத்து போலீசார் ஸ்ரீகந்தராஜாவை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் இருந்து ரூ.3 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்ததாக கூறினர். ஆனால் வீட்டில் லட்சக்கணக்கான பணம், நகைகள், வெள்ளி பொருட்கள் திருட்டுபோனதாக ஸ்ரீகந்தராஜாவின் குடும்பத்தின் சார்பில் கூறப்படுகிறது. வீட்டில் நகை, பணம் எவ்வளவு திருட்டு போயிருப்பது என்பது குறித்து ஸ்ரீகந்தராஜா வந்தால் தான் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை திருமண மண்டபத்தில் மணமகளுக்கு சொந்தமான 60 பவுன் நகை திருட்டு
தஞ்சை திருமண மண்டபத்தில் மணமகளுக்கு சொந்தமான 60 பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபர், போலீசாரை கண்டதும் நகையை போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
2. பண்ருட்டியில், ஆசிரியர் தம்பதி வீட்டில் திருடிய வாலிபர் கைது
பண்ருட்டியில் ஆசிரியர் தம்பதி வீட்டில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
3. அரக்கோணம் அருகே, 2 டாஸ்மாக் கடைகளில் ரூ.1½ லட்சம் கொள்ளை - பூட்டுகளை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
அரக்கோணம் அருகே 2 டாஸ்மாக் கடைகளில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.
4. தஞ்சை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு போலீசார் விசாரணை
தஞ்சை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. பட்டத்தரசி அம்மன் கோவிலில் சிலை திருட்டு: மேலும் ஒருவர் கைது 4-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவிலை உடைத்து சிலை திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரை 4-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை