மாவட்ட செய்திகள்

பாபர் மசூதி இடிப்பு தினம்:முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் + "||" + Babri Masjid Demolition Day: Muslim organization demonstrated

பாபர் மசூதி இடிப்பு தினம்:முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினம்:முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அதுதொடர்பான வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி மதுரையில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரை, 

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மதுரையில் முஸ்லிம் அமைப்பினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பாபர் மசூதி வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். அதே இடத்தில் பாபர் மசூதியை கட்ட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் முனிச்சாலை ஒபுளா படித்துறை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயலாளர் அர்ஷத் அகமது அல்தாபி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் காஜா முகைதீன் ஆகியோர் உரையாற்றினர்.

இதேபோல் தெற்கு வாசல் சின்னக்கடை தெருவில் த.மு.மு.க. சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் ஷேக் இப்ராகிம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். குப்புபிள்ளை தோப்பில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தொடர்புடைய செய்திகள்

1. ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் 40 பேர் கைது கோபியில் பரபரப்பு
கோபியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் 40 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் மாணவிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. துரைப்பாக்கத்தில் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டம்
துரைப்பாக்கத்தில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. ரேஷன்கடையில் காலாவதியான காபித்தூள் வினியோகம் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
ரேஷன்கடையில் காலாவதியான காபித்தூள் வினியோகம் செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.