நாமக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்


நாமக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 8 Dec 2018 3:30 AM IST (Updated: 8 Dec 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல், 

கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும். இணையதள சேவையை சிறப்பாக செயல்படுத்த தரமான கணினியை வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்ட மாறுதல்களை ஒரே அரசாணை மூலம் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று, நாமக்கல் பூங்கா சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட துணை தலைவர் நந்தகுமார், மாவட்ட துணை செயலாளர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

அப்போது நடைமுறையில் உள்ள சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும், எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த போராட்டத்தில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பணி புரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் 250 பேர் பங்கேற்றதாக மாவட்ட செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். அடுத்த கட்ட போராட்டமாக வருகிற 10-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார். முடிவில் வட்டத் தலைவர் செந்தில்கண்ணன் நன்றி கூறினர்.

Next Story