பாம்பன் தூக்குப்பாலத்தில் சீரமைப்பு பணி; பயணிகள் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


பாம்பன் தூக்குப்பாலத்தில் சீரமைப்பு பணி; பயணிகள் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 7 Dec 2018 11:15 PM GMT (Updated: 7 Dec 2018 8:31 PM GMT)

பாம்பன் ரெயில்வே தூக்குப் பாலத்தில் சீரமைப்பு பணி காரணமாக பயணிகள் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பனைக்குளம்,

ராமேசுவரம் அருகே பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் கடந்த சில நாட்களுக்குமுன் விரிசல் ஏற்பட்டது. விரிசல் ஏற்பட்ட பகுதி தற்காலிகமாக உடனடியாக சீரமைக்கப்ப ட்டது.இதைத்தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் ரெயில் தூக்குப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் ரெயில் என்ஜின் மற்றும் பயணிகள் இல் லாமல் ரெயில் பெட்டிகளுடன் ரெயில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட து.அப்போது வழக்கத்தைவிட தூக்குப் பாலத்தில் அதிக அதிர்வுகள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து ரெயில் தூக்குப்பாலம் வழியாக தற்காலிகமாக ரெயில் போக்குரத்து நிறுத்தப்பட்டது. பாம்பன் ரெயில்வே தூக்குப் பாலத்தை சீரமைப்பு பணி நடைபெறவு ள்ளதால் ஒரு மாதத்திற்கு மேலாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்

போக்குவரத்து முழுமையாக நிறுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் சென்னை,திருப்பதி,கன்னியாகுமரி,ஓகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேசுவரம் வரும் ரெயில்கள் மண்டபம் வரையிலும் இயக்கப்பட்டு வருகின் றன. அதுபோல் மண்டபத்தில் இருந்தே சென்னை உள்ளிட்ட மற்ற ஊர்களுக்கும் ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் வருகிற 28–ந்தேதி வரை மண்டபம்–ராமேசுவரம் இடையே ரெயில் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மண்டபம் ரெயில் நிலையத்தில் அறிவிப்பு பலகை மற்றும் தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் வருகிற 28–ந் தேதி வரை மதுரையில் இருந்து ராமேசுவரம் வரும் பயணிகள் ரெயில் சனி,ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து மற்ற நாட்களில் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும், ராமநாதபரத்தில் இருந்தே மதுரைக்கு மீண்டும் பயணிகள் ரெயில் புறப்பட்டு செல்லும் எனவும் ரெயில்வே நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து அனைத்து ரெயில்களும் இயக்கப்படுவதால் தற்போது அங்கு பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வழக்கமாக ராமேசுவரம் மற்றும் பாம்பனில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்பப்படும் மீன் பெட்டிகளும் மண் டபம் கொண்டு வரப்பட்டு ரெயில் மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றன.


Next Story