தேர்தலை சாதி ரீதியாக அணுகக் கூடாது - தொல்.திருமாவளவன் பேட்டி


தேர்தலை சாதி ரீதியாக அணுகக் கூடாது - தொல்.திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 8 Dec 2018 10:45 PM GMT (Updated: 8 Dec 2018 8:30 PM GMT)

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மதுரை,

கஜா புயலால், ‘தேசம் காப்போம்‘ என்ற தலைப்பில் நடைபெற இருந்த மாநாடு ஜனவரிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு, இந்த மாநாடு நடைபெறும். அம்பேத்கர் படத்தின் முன்பு நின்றவாறு, ஒரு இளைஞர் பெண்களை கொச்சைப்படுத்தி பேசி இருக்கிறார். அவர் யார் என்று தெரியாத நிலையில் பா.ம.க. எங்கள் மீது அவதூறு பரப்பி வருகிறது. தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக வேண்டும், சாதி ரீதியாக அணுக முடியாது.

அரசியல் உள் நோக்கத்திற்காக மோடி அரசு, வரம்புகளை மீறி கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. மேகதாது அணை விவகாரத்திற்கு, தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டியது பாராட்டுக்குரியது. மேகதாது அணை கட்ட ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கஜா புயல் நிவாரண தொகை அறிவித்ததை எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story