மாவட்ட செய்திகள்

குளித்தலையில் சாலையோரமாக நிறுத்தப்படும் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு + "||" + Traffic impacts on roadside buses

குளித்தலையில் சாலையோரமாக நிறுத்தப்படும் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு

குளித்தலையில் சாலையோரமாக நிறுத்தப்படும் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு
குளித்தலையில் சாலையோரம் நிறுத்தப்படும் பஸ்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குளித்தலை,

திருச்சி மற்றும் கரூர் ஆகிய இரு நகரப் பகுதிக்கு இடையேயுள்ள முக்கிய ஊர் குளித்தலை ஆகும். நகராட்சியாக உள்ள குளித்தலை பஸ்நிலையம் வழியாக திருச்சி மற்றும் கரூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் நின்று செல்லும். குளித்தலையில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு ஊர்களுக்கு தினசரி பஸ் மூலம் வேலைக்கு சென்றுவருகின்றனர். குளித்தலை பஸ்நிலையத்தின் உள்ளே திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் வந்து செல்வதில்லை. அவை அனைத்தும் சாலையோரமே நிறுத்தப்பட்டிருக்கும். இதேபோல் கரூர் மார்க்கமாக செல்லும் பஸ்களும் பஸ்நிலையத்தின் முன்பு சாலையில் நிறுத்தப்படுகிறது. திருச்சி, கரூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் அனைத்தும் சாலையோரமே நிறுத்தப்படுவதால் தினந்தோறும் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுவந்தது.


இந்தநிலையில் திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிறுத்துவதற்கு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. ஆனால் இங்கு பஸ்களே நிறுத்தப்படுவதில்லை. போக்கு வரத்து நெரிசலை கட்டுபடுத்த கரூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் குளித்தலை பஸ்நிலையத்திற்கு வந்து செல்ல போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் இதற்காக காந்திசிலை அருகே தடுப்புகளும் வைத்துள்ளனர். போக்குவரத்து போலீசார் பஸ்நிலையப் பகுதியில் பணியில் இருக்கும்போது மட்டுமே கரூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் பஸ்நிலையத்திற்கு நுழைந்து நின்று செல்கின்றன.

போலீசார் பணியில் இல்லாத நேரங்களில் பஸ்கள் அனைத்தும் சாலையோரமே நிறுத்தப்படுகிறது. அப்போது போக்கு வரத்து வெகுவாக பாதிக்கப்படு கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை பற்றி பஸ் டிரைவர்கள் அக்கறை கொள்வதில்லை. எனவே போக்குவரத்துத்துறை அதிகாரிகள் குளித்தலை பஸ்நிலையம் வழியாகச் செல்லும் அனைத்து பஸ்களும் உரிய இடத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தோகைமலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
தோகைமலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2. பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 3–வது நாளாக வேலை நிறுத்தம் பெரும்பாலான இடங்களில் இணையதளசேவை பாதிப்பு
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 3–வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இணையதள சேவை பாதிக்கப்பட்டது.
3. 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்: திருச்சியில் பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பு
2-வது நாளாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றதையொட்டி, திருச்சியில் பி.எஸ்.என்.எல். சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
4. கஜா புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிக்கு ரூ.3 லட்சம் சீர்வரிசை பொருட்கள் கிராம மக்கள் வழங்கினர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிக்கு கிராம மக்கள் ரூ.3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
5. வலங்கைமான் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
வலங்கைமான் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை