தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 2 ஆயிரத்து 201 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 2 ஆயிரத்து 201 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 9 Dec 2018 4:00 AM IST (Updated: 9 Dec 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம், 2 ஆயிரத்து 201 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தேனி,

தேனி மாவட்ட கோர்ட்டில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற நீதிபதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதேபோல் உத்தமபாளையம், பெரியகுளம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட கோர்ட்டுகளிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில், வராக்கடன் விபத்து உள்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதன்படி 82 வராக்கடன் வழக்குகள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்து 201 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.3 கோடியே 29 லட்சத்து 79 ஆயிரத்து 450-க்கு தீர்வு காணப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் ஆறுமுகம் செய்திருந்தார்.



Next Story