புனேயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.21½ லட்சம் கொள்ளை 2 பேருக்கு வலைவீச்சு
புனேயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.21½ லட்சத்தை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புனே,
புனேயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.21½ லட்சத்தை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பணம் கொள்ளை
புனே வாகட் ரஹட்னி சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் இந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர் ஒருவர் வந்தார். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தகவல் அறிந்து வங்கி அதிகாரிகளும் அங்கு வந்தனர்.
விசாரணையில், மர்மஆசாமிகள் 2 பேர் அந்த ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை பூட்டிக் கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் கட்டர் மூலம் உடைத்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருந்தது தெரியவந்தது.
2 பேருக்கு வலைவீச்சு
ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.21 லட்சத்து 65 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story