வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 10 Dec 2018 3:45 AM IST (Updated: 10 Dec 2018 4:45 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவை மாநகர பகுதியில் வழிப்பறி, திருட்டு, நகை பறிப்பு உள்பட குற்றசம்பவங்கள் நடப்பதை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்து வருகிறது.

இந்த நிலையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கை செய்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். உடனே அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில் அவர் கோட்டை மேட்டை சேர்ந்த ரியாசுதீன் (வயது 23) என்பதும், அவர் ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நகையை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், ரியாசுதீன் மீது ஏராளமான வழிப்பறி, நகை பறிப்பு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. எனவே அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரணுக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.

அதன்பேரில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை கோவை மத்திய சிறையில் இருக்கும் ரியாசுதீனிடம் போலீசார் வழங்கினார்கள். 

Next Story