ரூ.1,700 கோடி சாலை பணி முறைகேட்டில் சிக்கிய மாநகராட்சி ஊழியர்கள் 56 பேர் மேல் முறையீடு
ரூ.1,700 கோடி சாலை பணி முறைகேட்டில் சிக்கிய மாநகராட்சி ஊழியர்கள் 56 பேர் மேல் முறையீடு செய்து உள்ளனர்.
மும்பை,
ரூ.1,700 கோடி சாலை பணி முறைகேட்டில் சிக்கிய மாநகராட்சி ஊழியர்கள் 56 பேர் மேல் முறையீடு செய்து உள்ளனர்.
ரூ.1,700 கோடி முறைகேடு
மும்பை மாநகராட்சியால் போடப்பட்ட சாலைகள், சாலை சீரமைப்பு பணிகளில் ரூ.1,700 கோடி முறைகேடு நடந்திருப்பது கடந்த 2015-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி நடத்திய விசாரணையில், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் என 169 பேரின் அலட்சியத்தால் தான் முறைகேடு நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாநகராட்சி கமிஷனர், 169 பேர் மீதும் நடவடிக்கை எடுத்தார். இதில் மாநகராட்சி தலைமை என்ஜினீயர் உள்பட 6 என்ஜினீயர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். 12 அதிகாரிகள் பணிஇறக்கம் செய்யப்பட்டனர். 123 பேருக்கு ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டது. மீதமுள்ளவர்கள் மீது ம் குற்றத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.
மேல் முறையீடு
இந்தநிலையில், மாநகராட்சியால் தண்டிக்கப்பட்ட 56 ஊழியர்கள் தங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யுமாறு மாநகராட்சியில் மேல்முறையீடு செய்து உள்ளனர்.
இந்த மேல்முறையீடு மனுக்களை மாநகராட்சி கூடுதல் கமிஷனர்கள் சந்திரசேகர் கோரே, கிஷோர் ஷிர்சாகர் ஆகியோர் அடங்கிய 2 நபர் கமிட்டி விசாரிக்க உள்ளது.
Related Tags :
Next Story