கிருஷ்ணகிரியில் காவலர், குடும்பத்தினருக்கான நிறை வாழ்வு பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்


கிருஷ்ணகிரியில் காவலர், குடும்பத்தினருக்கான நிறை வாழ்வு பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Dec 2018 10:15 PM GMT (Updated: 10 Dec 2018 4:40 PM GMT)

கிருஷ்ணகிரியில் காவலர் மற்றும் குடும்பத்தினருக்கான நிறை வாழ்வு பயிற்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி ஆயுதப்படை வளாகத்தில் காவலர் நிறை வாழ்வு பயிற்சி தொடங்கியது. இந்த பயிற்சியின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமை தாங்கினார். கலால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பங்கேற்று, பயிற்சியினை குத்துவிளக்கேற்றி ஏற்றி வைத்தார்.

இதில் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பயிற்சியில், காவல்துறை பணியாளர்களின் பணி தொடர்பான நிலைப்பாடுகள் மற்றும் உணர்வு நிலையிலான தேவைகளை முறையாகப் புரிந்து கொள்ளுதல்.

காவலர்களின் பணி, தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையை மேற்கொள்வதற்கான திறன் மேம்பாடு. தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை, குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளுக்கு அறிவூட்டல் ஆகியவற்றை கையாளுவதற்கான அறிவாற்றலையும், திறனையும் வழங்குதல். வேலை, குடும்பம் மற்றும் சமுதாய சூழல்களால் காவலர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் ஏற்படும் மன அழுத்தத்தினை போக்கவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற மனு அழுத்தங்கள் ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாட்டினையும் அறிவுறத்தும் நோக்கத்துடன் இப்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

3 நாள் பயிற்சியில், 2 நாட்கள் காவலர்களுக்கும், மூன்றாம் நாள் காவலர்களின் குடும்பத்தினருக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை காவலர்களுக்கும் பகுதி வாரியாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முதல் கட்டமாக 40 காவலர்களுக்கு பயிற்சி தொடங்கியது. பயிற்சியை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷோபனா, சென்மீனா ஆகியோர் அளித்து வருகின்றனர்.

Next Story