‘வேளாளர்’ என பயன்படுத்த எதிர்ப்பு: வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் ஊர்வலம்
‘வேளாளர்’ என பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் ஊர்வலம் நடத்தினர்.
திருச்சி ,
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்த படி, வேளாளர் என்பதை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மனு கொடுக்க வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் வாகனங்களில் கலெக்டர் அலுவலகத் திற்கு புறப்பட்டனர்.
திருச்சி கோர்ட்டு கட்டிடத்தின் பின்புறம் எம்.ஜி.ஆர். சிலை அருகே அந்த கட்சியினர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்தபோது அங்கு போலீஸ் உதவி கமிஷனர் சிகாமணி, இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர், சண்முகவேல், வேல்முருகன் மற்றும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஹரிஹரூண், துணைத்தலைவர் முருகராஜன் மற்றும் மாநில அமைப்பாளர் நீலகண்டன் ஆகியோர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கண்காணிப்பு கேமராவுடன் உள்ள போலீஸ் வாகனம் மற்றும் கைது செய்யப்பட்டால் அவர்களை அழைத்து செல்ல போலீஸ் வாகனம் ஆகியவையும் கொண்டு வரப்பட்டது.
அப்போது போலீஸ் தரப்பில், “ஏற்கனவே, கலெக்டர் அலுவலகத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி மனு கொடுக்க இருக்கிறார். எனவே, அவர் மனு கொடுத்து விட்டு சென்றதும் உங்களை அனுமதிக்கிறோம். மீறி செல்ல முயன்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் மதியம் அக்கட்சியினர் மனு கொடுக்க செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இருசக்கர வாகனங்கள், கார் ஆகியவற்றில் திரளானவர்கள் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து ஊர்வல மாக புறப்பட்டனர். பாரதிதாசன் சாலை, பறவைகள் சாலை, மத்திய பஸ் நிலையம் வழியாக கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சமீப காலமாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் ஜான் பாண்டியன் ஆகியோர் ‘வேளாளர்’ சமூகத்தின் அடையாள பெயர்களை குறிப்பிட்டு வேளாளர்களின் வரலாற்றையும், ஆன்மிகத்தையும், சமய முன்னோடிகளையும் தரக்குறைவாக பேசி வருகிறார்கள். அவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவேந்திர குலத்தான் என்னும் பெயரோடு வேளாளர் என்னும் எங்களது சாதியை பயன்படுத்தும் கோரிக்கையை அரசு ஏற்கக்கூடாது” என கூறப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story