திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது


திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 12 Dec 2018 4:00 AM IST (Updated: 12 Dec 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.

திருச்சி,

பஞ்சபூதங்களில் நீர் தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் முதல் கட்டமாக கடந்த 9-ந்தேதி பரிவார மூர்த்திகள் மற்றும் உப சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

2-வது கட்டமாக இன்று (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சன்னதி மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்ட 7 கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இதற்கான யாகசாலை பூஜைகள் கோவில் வளாகத்தில் சுந்தர பாண்டியன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் கடந்த 9-ந்தேதி தொடங்கின. நேற்று இரவு 5-ம் கால யாகசாலை பூஜை மற்றும் பூர்ணாஹுதி, தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை மற்றும் அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடக்கிறது.

Next Story