சீரமைப்பு பணிக்கு ஊழியர்கள் கேட்டு மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


சீரமைப்பு பணிக்கு ஊழியர்கள் கேட்டு மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 Dec 2018 4:15 AM IST (Updated: 12 Dec 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

சீரமைப்பு பணிக்கு ஊழியர்கள் கேட்டு மின்வாரிய அலுவ லகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டத் தில் கஜா புயலால் சுமார் 50 ஆயிரம் மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் உடைந்து நாசமானது. இதனால் நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம், குடிதண்ணீர் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து கேரளா, ஆந்திராஉள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மின்வாரிய ஊழியர்கள் அழைத்து வரப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்தது. சுமார் 10 நாட்கள் நடந்த கடும் பணியால் பல இடங்களுக்கும் குடிதண்ணீர் தொட்டிகளுக்கு மின் இணைப்புகள் கிடைத் தது. அதன் பிறகு வெளியூரில் இருந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் சொந்த ஊர்க ளுக்கு திரும்பினர். நகர பகுதிகளில் மின்சாரம் கிடைத்தாலும், நகரில் பல இடங்களுக்கும் நகரை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் அனைத்து கிராம மக்களின் வீடுகளுக்கு மின்இணைப்பு கிடைக்காமல் தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் மின் சீரமைப்பு பணிகளுக்கு வந்தவர்களும் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் ஒவ்வொரு கிராமத்திலும் பணிகள் நிறைவடையாமல் உள்ளது. சாலை ஓரத்திலும், தண்ணீர் தொட்டிகள் உள்ள பகுதிகளிலும் மின்சாரம் கிடைத்துள்ளது. ஆனால் உள்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. பல நாட்களாக மின்சாரம் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கீரமங்கலம் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்து மின்கம்பங்களை சீரமைக்க மின்சார வாரிய ஊழியர்கள் வேண்டும் என்று கூறி மின்வாரிய அலுவலகத் தையும் அதிகாரிகளையும் முற்றுகை யிட்டனர். மேலும் அதிகாரிகளின் பதில் திருப்தி அளிக்காததால் முற்றுகை யிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மின்சார வாரிய அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது மின்கம்பங்கள் தற்போது வந்துள்ளது. அதை அனைத்து கிராமங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். மேலும் 64 ஊழியர்கள் சீரமைப்பு பணியில் உள்ளனர். அவர்கள் பல குழுக்களாக பிரிந்து சீரமைப்பு பணிகள் செய்கிறார்கள் என்றனர். 64 பேர் எந்த ஊரில் வேலை செய்கிறார்கள் என்று பொதுமக்கள் கேட்க அதிகாரிகள் முறையான பதில் கூறவில்லை. இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அனைத்து கிராமங்களுக்கும் மின்கம்பங்களும், சீரமைப்பு பணிக்கு மின்வாரிய ஊழியர் களும் அனுப்பி வைக்க வேண்டும். மறுபடியும் பணியாளர்கள் பற்றாக்குறை என்று கிராமங்களை புறக் கணித்தால் மக்கள் போராட் டம் பெரிய அளவில் இருக்கும் என்று கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

Next Story