புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம்


புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2018 10:45 PM GMT (Updated: 11 Dec 2018 8:23 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசு அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.

திருவாரூர்,

‘கஜா’ புயலால் சேதமடைந்த கூரை வீடு, தொகுப்பு வீடு, ஓட்டு வீடு, மாடி வீடு உள்ளிட்ட அனைத்து வீடுகளுக்கும் நிவாரண தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். உயிர் இழந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.

தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். புயல் பாதித்த கிராமங்களில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று திருவாரூரில் தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல், ஒன்றிய செயலாளர் இடும்பையன், மாவட்டக்குழு உறுப்பினர் சாமியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாதவன், பவுன்ராஜ், சேகர், ரகுபதி, ஜெயபால், சுபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொரடாச்சேரியில் ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த காத்திருப்பு போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் தம்புசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இதில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணியன், ஜெயபால், மருதையன், பரமசிவம், கோபிராஜ், மேகலா, வீரையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சோம.ராஜ மாணிக்கம் தலைமை தாங்கினார்.

நகர செயலாளர் ஜோசப், கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, முனியாண்டி, பூசாந்திரம் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரணியன், மாவட்டக்குழு உறுப்பினர் கைலாசம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கோட்டூரில் ஒன்றிய அலுவகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய காத்திருப்பு போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தங்கராசு, குமாரராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், கல்யாணசுந்தரம், ரகுபதி, ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story