கார்த்திகை கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி இலந்துறை சுந்தரேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
கார்த்திகை கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி இலந்துறை சுந்தரேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள இலந்துறையில் சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. அகத்தியர், கண்வர், பிருகு, அத்திரி, கபிலர், வியாசர், துர்வாசர், சதானந்தர் உள்ளிட்ட முனிவர்களும், சூரியனும் இந்த கோவிலில் சுந்தரேஸ்வரரை வழிபட்டதாக புராணம். இக்கோவிலில் உள்ள வியாச குளத்தில் புனித நீராடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.
பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்திகள் வியாசர் குலத்தின் முன்பு எழுந்தருளினார். இதை தொடர்ந்து அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குளத்தில் புனித நீராடினர்.
இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆர்.கே பாரதிமோகன் எம்.பி., திருவிடைமருதூர் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அசோக்குமார், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் தயாளன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வி. கே. பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் செ. மாரியப்பன் மற்றும் இலந்துறை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story