பெரியப்பாவை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு


பெரியப்பாவை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Dec 2018 10:15 PM GMT (Updated: 11 Dec 2018 9:11 PM GMT)

கும்பகோணம் அருகே பெரியப்பாவை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே புதுப்படையூர் வெள்ளா தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் முருகானந்தம்(வயது 32). கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ந் தேதி முருகானந்தத்துக்கும் அவரது தந்தை பாலசுப்பிரமணியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது பாலசுப்பிரமணியனின் அண்ணன் சாமிநாதன் சண்டையை விலக்கிவிட சென்றார். இதில் ஆத்திரமடைந்த முருகானந்தம் சாமிநாதனை பிடித்து கீழே தள்ளிவிட்டார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த சாமிநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் சாமிநாதனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாமிநாதன் இறந்தார்.

இது குறித்து பட்டீஸ்வரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் பெரியப்பாவை கொலை செய்த குற்றத்துக்காக முருகானந்தத்துக்கு ஆயுள்தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ப.உ.செம்மல் தீர்ப்பு கூறினார்.

Next Story