ஒட்டன்சத்திரத்தில், பஸ்-கார் நேருக்குநேர் மோதல்: வனத்துறை அலுவலர் மனைவி-டிரைவர் சாவு - கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்
ஒட்டன்சத்திரத்தில் பஸ்சும், காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரில் வந்த வனத்துறை அலுவலர் மனைவி மற்றும் டிரைவர் பரிதாபமாக இறந்தனர்.
ஒட்டன்சத்திரம்,
திண்டுக்கல் இந்திரா நகரை சேர்ந்தவர் திருவாசகம். இவர் திண்டுக்கல் வனத்துறையில் அலுவலராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வீரமணி(வயது 45). நேற்று வீரமணி தங்களுக்கு சொந்தமான காரில் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார். காரை அம்மையநாயக்கனூர் அருகே உள்ள பொட்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த நாகப்பன்(55) ஓட்டினார். ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகம் அருகே வந்தபோது திருச்சியில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசுபஸ்சும், காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இதில் காரில் வந்த வீரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டிரைவர் நாகப்பன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே நாகப்பன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story