பரமத்தி அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூலித்தொழிலாளி பலி


பரமத்தி அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூலித்தொழிலாளி பலி
x
தினத்தந்தி 13 Dec 2018 3:00 AM IST (Updated: 13 Dec 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

பரமத்தி அருகே, சாலையை கடந்த தொழிலாளி மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.

பரமத்தி வேலூர்,

பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள மறவாபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 53), கூலித்தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் மறவாபாளையத்தில் இருந்து வெள்ளாளபாளையத்திற்கு செல்வதற்காக நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்க முயன்றார்.

அப்போது வேலூரில் இருந்து பரமத்தி நோக்கி வேகமாக சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சுப்பிரமணி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பட்டுக்கோட்டை மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் கருணாகரன் (24) என்பவர் படுகாயம் அடைந்து நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தற்போது பரமத்தி வேலூரில் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Next Story