கீழ்வேளூரில் மணல் கடத்திய 2 பேர் கைது டிராக்டர் பறிமுதல்


கீழ்வேளூரில் மணல் கடத்திய 2 பேர் கைது டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Dec 2018 3:45 AM IST (Updated: 14 Dec 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூரில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில், கீழ்வேளூரை அடுத்த தேவூர் கடுவையாறு பாலம் அருகே கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

டிராக்டர் பறிமுதல்

அப்போது தேவூர் பகுதியில் இருந்து கீழ்வேளூரை நோக்கி டிராக்டர் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த டிராக்டரை மறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது உரிய அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தி சென்றதும், டிராக்டர் டிரைவர் தேவூர் பாரதியார் நகரை சேர்ந்த கிருபாகரன் (வயது 24) மற்றும் தெற்காளத்தூர் காலனி தெருவை சேர்ந்த அருணாச்சலம் மகன் அருண் (20) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story