பெரும்பாறை அருகே: காட்டுயானை தாக்கி 2 பெண்கள் படுகாயம்


பெரும்பாறை அருகே: காட்டுயானை தாக்கி 2 பெண்கள் படுகாயம்
x
தினத்தந்தி 14 Dec 2018 3:45 AM IST (Updated: 14 Dec 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே காட்டுயானை தாக்கியதில் 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.

பெரும்பாறை,

கொடைக்கானல் தாலுகா பெரும்பாறை அருகே உள்ள பள்ளத்துகால்வாய் கிராமத்தை சேர்ந்தவர் கருப்புச்சாமி. இவருடைய மனைவி பரமேஸ்வரி (வயது 32). கவுச்சிகொம்பு கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் மனைவி அய்யம்மாள் (40).

இவர்கள் 2 பேரும் பள்ளத்துகால்வாய் அருகே வெள்ளைகொடி பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர்

அப்போது காட்டுயானை ஒன்று அந்த தோட்டத்துக்குள் புகுந்தது. யானையை பார்த்ததும் அவர்கள் இருவரும் தப்பியோட முயன்றனர். ஆனால் யானை அவர்களை விடாமல் துரத்தி சென்று தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பரமேஸ்வரியும், அய்யம்மாளும் சிகிச்சைக்காக கே.சி.பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக் காக ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story