திருக்கழுக்குன்றத்தில் கோவிலில் சிவலிங்கத்தை சேதப்படுத்தி நந்தி சிலை திருட்டு
திருக்கழுக்குன்றத்தில் கோவிலில் சிவலிங்கத்தை சேதப்படுத்தி நந்திசிலையை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
கல்பாக்கம்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் கருங்குழி சாலையில் பழமை வாய்ந்த காலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று காலை கோவில் நிர்வாகி பாண்டியன் வந்தார். அப்போது அங்கிருந்த கல்லால் ஆன சிவலிங்கமும் நந்தியும் மர்மநபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது.
அதன் மீது இருந்த செம்பால் செய்யப்பட்ட நாகம் மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது. பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன.
லிங்கத்தின் எதிரில் இருந்த நந்தி சிலை முழுமையாக பெயர்த்து எடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து அவர் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Tags :
Next Story