இழப்பீடு வழங்ககோரி வெங்காயம், மக்காச்சோள பயிர்களை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


இழப்பீடு வழங்ககோரி வெங்காயம், மக்காச்சோள பயிர்களை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2018 10:15 PM GMT (Updated: 14 Dec 2018 8:02 PM GMT)

இழப்பீடு வழங்க கோரி அழுகிய வெங்காயம் மற்றும் படைப்புழுக் களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர் களை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

துறையூர்,

துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் மற்றும் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இதில் மக்காச்சோளம் பயிர் படைப்புழுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த சேதம் அடைந்துள்ளது. இதே போல் வெங்காய பயிர் சமீபத்தில் பெய்த மழையால் அழுகி விவசாயிகளுக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் துறையூர் பஸ் நிலையம் முன்பு அழுகிய வெங்காய பயிர்களையும், படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களையும் கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சிவசூரியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் ரமேஷ், துறையூர் ஒன்றிய செயலாளர் சேகர், மருதை, சக்கரவர்த்தி மற்றும் விவசாயிகள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

Next Story