ஜி.எஸ்.டி. திட்டத்தில் இந்த ஆண்டு மத்திய அரசு வழங்கும் இழப்பீடு குறைவாக இருக்கும் - குமாரசாமி தகவல்


ஜி.எஸ்.டி. திட்டத்தில் இந்த ஆண்டு மத்திய அரசு வழங்கும் இழப்பீடு குறைவாக இருக்கும் - குமாரசாமி தகவல்
x
தினத்தந்தி 15 Dec 2018 5:00 AM IST (Updated: 15 Dec 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. திட்டத்தில் இந்த ஆண்டு மத்திய அரசு வழங்கும் இழப்பீடு குறைவாக இருக்கும் என்று சட்டசபையில் குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர்கள், விசுவேஸ்வரஹெக்டே காகேரி, பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கேட்ட கேள்விக்கு முதல்-மந்திரி குமாரசாமி பதிலளிக்கையில் கூறியதாவது:-

2017-18-ம் ஆண்டில் சரக்கு-சேைவ வரி(ஜி.எஸ்.டி.) திட்டத்தின் மூலம் இழப்பீடாக ரூ.7,500 கோடியை மத்திய அரசு வழங்கியது. நடப்பு ஆண்டில் இது அதைவிட குறைவாக கிடைக்கலாம்.

இந்த வரி திட்டத்தில் உள்ள குறைகளை கண்டறிந்து அதை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயத்தில் மாநில அரசுக்கு குறைந்த அளவே அதிகாரம் உள்ளது. வரி கசிவை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

முன்னதாக பேசிய பா.ஜனதா உறுப்பினர்கள், “சரக்கு-சேவை வரி திட்டத்தில் உள்ள குறைகளை சரிசெய்ய மத்திய அரசுடன் விவாதிக்க வேண்டும். இந்த திட்டத்தில் இழப்பீடாக மத்திய அரசு எவ்வளவு நிதி வழங்கியது என்பது குறித்து விவரங்களை தெரிவிக்க வேண்டும்” என்றார்.

சபையில் பொது கொள்முதலில் கர்நாடக வெளிப்படைத்தன்மை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை சட்டசபை கூட்டு குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று பா.ஜனதா உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதை அரசு நிராகரித்துவிட்டது.

Next Story