டிடிவி தினகரனுக்கு செந்தில் பாலாஜி துரோகம் செய்து விட்டார்; மாரியப்பன் கென்னடி குற்றச்சாட்டு


டிடிவி தினகரனுக்கு செந்தில் பாலாஜி துரோகம் செய்து விட்டார்; மாரியப்பன் கென்னடி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 Dec 2018 5:00 AM IST (Updated: 15 Dec 2018 5:18 AM IST)
t-max-icont-min-icon

டிடிவி தினகரனுக்கு செந்தில் பாலாஜி துரோகம் செய்து விட்டார் என்று மாரியப்பன் கென்னடி தெரிவித்துள்ளார்.

மானாமதுரை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் மாரியப்பன் கென்னடி கூறியுள்ளதாவது:–

 தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தி.மு.க.விற்கு சென்று உள்ளது மிக பெரிய துரோகம். தி.மு.க.விற்க்கு செல்வது தற்கொலை செய்வதற்கு சமம்.

அ.ம.மு.க.வை பொறுத்தவரை யார் போனலும் கவலை இல்லை, மக்கள் இடத்தில் எங்களுக்கு மட்டுமே ஆதரவு உள்ளது. செந்தில் பாலாஜி மட்டும் இல்லை நான் சென்றால் கூட அ.ம.மு.க.விற்கு பாதிப்பு இல்லை. இதன் மூலம் அவர் டிடிவி தினகரனுக்கு துரோகம் செய்து விட்டார். டிடிவி தினகரனை மக்கள் ஏற்று கொண்டு விட்டார்கள். அதனால் தேர்தல் நடத்துவதற்கு கூட இந்த அரசு பயப்படுகிறது.

எத்தனையோ துரோங்களை பார்த்துவிட்டோம், இது ஒன்றும் கவலை இல்லை. எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தை விட பெரிய துரோகம், தி.மு.க.விற்கு அவர் செல்வது. அ.தி.மு.க.விற்கு சோதனை வந்த போது சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதல்–அமைச்சராக தேர்வு செய்தார். ஆனால் அவர் தான் துரோகத்திற்கு வித்திட்டு விட்டவர்.

அ.ம.மு.க.வை விட்டு விலகுபவர்கள் பூஜ்யத்திற்கு சமம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர்கள் வேலுச்சாமி, சரவணன், நிர்வாகிகள் மேட்டுமடை செந்தில் உட்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்


Next Story