இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு நன்மை கிடைக்காது பழ.நெடுமாறன் பேட்டி
இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு நன்மை கிடைக்காது என பழ.நெடுமாறன் கூறினார்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை, தமிழ் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது வேதாரண்யத்தில் உள்ள குருகுலம் பள்ளிக்கு சென்ற அவர், அங்கிருந்த மாணவிகளுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் மதுரை யாதவ கல்லூரி தாளாளர் சங்கர், திருச்செங்கோடு காந்தி ஆசிரம பொறுப்பாளர் தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி அறங்காவலர் குழு தலைவர் வேதரத்தினம் வரவேற்றார். நிகழ்ச்சியை தொடர்ந்து பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு நன்மை கிடைக்காது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பின்னரும், மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை மத்திய அரசு மனிதாபிமானத்தோடு கையாள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story