வாளாடி யார்டில் பராமரிப்பு பணி: திருச்சிக்கு இன்று ரெயில்கள் தாமதமாக வரும்
பராமரிப்பு பணிகாரண மாக திருச்சி க்கு இன்று ரெயில்கள் தாமதமாக வரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் வாளாடி யார்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி திருச்சிக்கு சில ரெயில்கள் இன்று தாமதமாக வரும். ரெயில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
*விருத்தாசலம்-திருச்சி பயணிகள் ரெயில் திருச்சிக்கு இன்று 55 நிமிடம் தாமதமாக வரும்.
*திருப்பாதிரிபுலியூர்-திருச்சி பயணிகள் ரெயில் திருச்சிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்தடையும்.
*நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்திற்கு 50 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்
*சென்னை-திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ், மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சென்னை-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் திருச்சிக்கு இன்று 15 நிமிடம் தாமதமாக வந்தடையும்.
*சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி கோட்டை ரெயில் நிலையத்திற்கு 15 நிமிடம் தாமதமாக வரும்.
*மதுரை-விழுப்புரம் பயணிகள் ரெயில், திருச்சி-திருப்பாதிரிபுலியூர் பயணிகள் ரெயில், திருச்சி-விருத்தாசலம் பயணிகள் ரெயில், திருச்சி-விழுப்புரம் பயணிகள் ரெயில் ஆகிய ரெயில்கள் அந்தந்த ஊர்களுக்கு 15 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
*மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ், காரைக்குடி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் விழுப்புரத்திற்கு 20 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
மேற்கண்ட தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story