‘அ.தி.மு.க. மூழ்கும் கப்பல் அல்ல; புரட்சி போர்க்கப்பல்’ துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி


‘அ.தி.மு.க. மூழ்கும் கப்பல் அல்ல; புரட்சி போர்க்கப்பல்’ துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
x
தினத்தந்தி 16 Dec 2018 4:55 AM IST (Updated: 16 Dec 2018 4:55 AM IST)
t-max-icont-min-icon

‘அ.தி.மு.க. மூழ்கும் கப்பல் அல்ல. புரட்சி போர்க்கப்பல்’ என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக சட்ட சபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கோவை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி கொண்டு இருக்கிறது. பாதிப்பு ஏற்பட்ட 11 மாவட்டங்களில் நிவாரணப்பணிகள் விரைவாக நிறை வடையும். கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் வழங்க வில்லை. தமிழக முதல்– அமைச்சர் நேரடியாக வலியுறுத்தியும் இதுவரை மத்திய அரசு நிவாரணத் தொகையை வழங்கவில்லை.

ஆனால் தமிழக அரசு இதுவரை ரூ.1,200 கோடி அளவில் நிவாரண பணிகளை மேற்கொண்டு உள்ளது. தமிழக அரசிடம் இருந்து அறிக்கை வரவில்லை என மத்திய அரசு சொல்வது சரியான காரணம் இல்லை. முதலில் உத்தேசமாக நிவாரணத் தொகையை வழங்கிவிட்டு கூட அறிக்கையை பிறகு பெறலாம்.

அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு சென்ற யாரும் அரசியலில் சரியான இடத்தை அடைய வில்லை. அ.தி.மு.க எப்போதும் நிலைத்த தன்மையுடன் நீடித்து நிற்கும். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க. விற்கு சென்றதால் கடுகளவு பாதிப்பு கூட அ.தி.மு.க.விற்கு கிடையாது. அவர் அங்கு சென்றால் தான் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்று சொல்கிறார்கள், அப்படி என்றால் தி.மு.க.வில் இதுவரை வெற்றிடம் தான் இருந்ததா?. அவர் சென்று தான் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியுமா?.

முன்பு ஈரோடு முத்துசாமி அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.விற்கு சென்ற பின்னர் அவர் அரசி யலில் வளர்ச்சி அடைய வில்லை. அ.தி.மு.க.வில் அவர் இருந்து இருந்தால் இந்நேரம் பெரிய வளர்ச்சி அடைந்து இருப்பார். ஈரோடு முத்துசாமி விலகியபோதே பின்னடைவு அடையாத அ.தி.மு.க.வில் செந்தில் பாலாஜி சென்றதாலா பாதிப்பு ஏற்பட போகிறது. இதனால் கொங்கு மண்டல அ.தி.மு.க.விற்கு பின்னடைவு ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம், அ.தி.மு.க. மூழ்கும் கப்பல் என செந்தில்பாலாஜி விமர்சித்து இருப்பது குறித்து கேட்ட கேள்விக்கு, ‘அ.தி.மு.க. மூழ்கும் கப்பல் அல்ல, புரட்சி போர்க்கப்பல்’ என்றார்.


Next Story