பராமரிப்பு பணி காரணமாக துறைமுக வழித்தடத்தில் ரெயில் சேவை ரத்து


பராமரிப்பு பணி காரணமாக துறைமுக வழித்தடத்தில் ரெயில் சேவை ரத்து
x
தினத்தந்தி 16 Dec 2018 12:03 AM GMT (Updated: 16 Dec 2018 12:03 AM GMT)

மும்பை மத்திய ரெயில்வே வழித்தடத்தில் வாராந்திர பராமரிப்பு பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி மத்திய ரெயில்வே வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது

மும்பை,

மத்திய ரெயில்வே வழித்தடமான சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பைகுல்லா வரை ஸ்லோ வழித்தடத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்த வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள் விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்படும்.

துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வடலா வரை காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்த வழித்தடத்தில் செல்லும் ரெயில்சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்த தகவல் மத்திய ரெயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story