ராஜபாளையம் பகுதியில் மணல் திருட்டு


ராஜபாளையம் பகுதியில் மணல் திருட்டு
x
தினத்தந்தி 16 Dec 2018 6:30 AM IST (Updated: 16 Dec 2018 6:30 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் பகுதியில் மணல் திருட்டு அமோகமாக நடந்துவருவதால் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் தாலுகாவில் மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் உற்பத்தியாகும் அனத்தலை ஆறு, முடங்கியார் ஆறு, கல்லாறு, தேவியாறு, புத்தூர் ஆறு ஆகியவையும் சேத்தூர் பகுதியில் பிராவடி ஆறு, நகரகுளம் ஆறு மற்றும் உமையன்குளம், கொல்லங்கொண்டான் பெரிய கண்மாய் உள்ளிட்டவை உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் ம்ழை பெய்யும்போது இவற்றில் நீர்வரத்து இருக்கும். ஆறுகளில் வரும் தண்ணீர் குளங்களை நிரப்பும்.

சமீபத்தில் இந்த பகுதியில் பரவலாக மழை பெய்து அனைத்து ஆறுகளிலும் நீர்வரத்து இருந்தது. குளங்களுக்கும் தண்ணீர் வந்தது. இந்தனால் தற்போது ஆற்றுப்படுகையில் மணல் சேர்ந்துள்ளது.

மணல் சேர்ந்திருப்பது திருட்டுகும்பலுக்கு கொண்டாட்டம் ஆகி விட்டது. டிராக்டர் செல்லும் அளவுக்குச் சாலை வந்தையுள்ள் இடங்களில் ஜே.சி.பி.எந்திரத்தை பயன்படுத்தி மணல் எடுத்துச்செல்கின்றனர். மற்ற இடங்களில் மாட்டு வண்டிகளில் அள்ளிச்செல்கிறார்கள்.

மேலும் அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுக்கும் வகையில் இரு சக்கரவாகனத்தில் சாக்கு பைகளில் மணலை மூடையாக கட்டி அள்ளி வருகின்றனர்.

தினமும் காலை வேளையில் இவ்வாறாக மணல் சேகரித்து மறைவான இடத்தில் கொட்டி வைத்து அவற்றை மொத்தமாக விற்று வருகிறார்கள். சிலர் இதனை இந்த சீசனுக்கு ஒரு தொழிலாகவே செய்யும் நிலை உள்ளது.

இயற்கை வளத்தை கொள்ளையடிக்கும் இந்த கும்பலை மடக்க அதிகாரிகள் தனிகவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, காவல்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது


Next Story