8–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஜாக்டோ– ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி
கோர்ட்டில் தீர்வு கிடைக்காவிட்டால் வருகிற 8–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ– ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறினார்.
நாகர்கோவில்,
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்த ஜாக்டோ– ஜியோ அமைப்பின் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் கடந்த 4–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையே ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநலவழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற ஜனவரி மாதம் 7–ந் தேதி நடைபெற உள்ளது.
இந்தநிலையில் குமரி மாவட்ட ஜாக்டோ– ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்பான கோர்ட்டு நிகழ்வுகள் பற்றிய விளக்க கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், பகவதியப்பபிள்ளை ஆகியோர் தலைமை தாங்கினர்.
மேலும் ஒருங்கிணைப்பாளர்கள் பெனின் தேவகுமார், ரமேஷ், சந்திரசேகர், சுரேஷ்குமார் அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராஜ்குமார், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் கனகராஜ், மூட்டா மாநில பொருளாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் நாகராஜன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கோவிந்தன்குட்டி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் இளங்கோ, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முருகன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்ட தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி கூறினார்கள்.
ஜாக்டோ– ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவருமான மாயவன் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–
கடந்த 10–ந் தேதி விசாரணையின்போது, 12–ந் தேதிக்குள் புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான நிபுணர்குழு அறிக்கையையும், மேலும் 21 மாத நிலுவைத் தொகை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தையும் கோர்ட்டில் அரசு சார்பில் தெரிவிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.
வருகிற 7–ந் தேதி நடைபெறும் விசாரணையின்போது கோர்ட்டு எங்களது கோரிக்கைகளை பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கோரிக்கைகளுக்கு நல்லதீர்வு கிடைக்காவிட்டால் வருகிற 8–ந் தேதி முதல் நாங்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே அரசுதான் எங்களை போராட்டத்துக்கு தள்ளிவிடுகிறது. ஜாக்டோ– ஜியோ போராட்டத்தை விரும்பவில்லை.
இவ்வாறு மாயவன் கூறினார்.
காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் பட்சத்தில் குமரி மாவட்டத்தில் இருந்து 18 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் என்று ஜாக்டோ–ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறினார்.

Related Tags :
Next Story