பலத்த காற்றில் தென்னை மரம் முறிந்து விழுந்து குழந்தை சாவு


பலத்த காற்றில் தென்னை மரம் முறிந்து விழுந்து குழந்தை சாவு
x
தினத்தந்தி 17 Dec 2018 3:00 AM IST (Updated: 16 Dec 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே பலத்த காற்று காரணமாக தென்னை மரம் முறிந்து விழுந்து குழந்தை பரிதாபமாக இறந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கீழ்மணம்பேடு பகுதியை சேர்ந்தவர் வாசு. இவரது மகன் சஞ்சய் (வயது 3). நேற்று முன்தினம் சஞ்சய் தன் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தான்.அப்போது வீசிய பலத்த காற்றில் வீட்டின் அருகில் நின்ற தென்னை மரம் முறிந்து விளையாடி கொண்டிருந்த சஞ்சய் மீது விழுந்தது.

இதில் படுகாயம் அடைந்த சஞ்சய் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்து போனான். இது குறித்து வாசு வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Next Story