நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தின் மாதிரி வரைபடம் பொதுமக்களின் பார்வைக்கு வைப்பு


நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தின் மாதிரி வரைபடம் பொதுமக்களின் பார்வைக்கு வைப்பு
x
தினத்தந்தி 16 Dec 2018 10:00 PM GMT (Updated: 16 Dec 2018 7:20 PM GMT)

நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தின் மாதிரி வரைபடம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

நெல்லை, 

இந்தியா முழுவதும் ‘ஸ்மார்ட்‘ சிட்டி திட்டத்தின் கீழ் பல முக்கிய நகரங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் நெல்லை மாநகராட்சியும் சேர்க்கப்பட்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் ஒரு கட்டமாக நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ.78½ கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் கீழ்பகுதியில் (அண்டர் கிரவுண்ட்) கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளன. தரைதளத்தில் பஸ் நிறுத்தும் வசதியும், முதல், இரண்டாவது தளத்தில் கடைகள், தங்கும் விடுதிகள், கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட உள்ளன.

இந்த பஸ்நிலையம் புதுப்பிக்கப்படுவதையொட்டி கடந்த 12-ந் தேதி நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் மூடப்பட்டது. இதனால் நெல்லை சந்திப்புக்கு வருகின்ற பஸ்கள் பஸ்நிலையத்தை சுற்றி மெயின்ரோட்டிலேயே சென்று வருகின்றன. இதனால் நெல்லை சந்திப்பு பகுதியில் தினமும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் புதுப்பிக்கப்பட உள்ள பஸ்நிலையத்தின் மாதிரி வரைபடம் மற்றும் கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், தரைதளத்தில் பஸ் நிறுத்தும் வசதியும், முதல், இரண்டாவது தளத்தில் கடைகள், தங்கும் விடுதிகள், கழிப்பிட வசதி உள்ளிட்டவைகள் எப்படி அமைக்கப்படும் என்பது குறித்த மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த மாதிரி வரைபடம் நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தின் முகப்பில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதை ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து சென்றனர்.

Next Story