மாவட்ட செய்திகள்

வழிப்பறி வழக்கில்4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது + "||" + In case of robbery 4 year old boy arrested

வழிப்பறி வழக்கில்4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

வழிப்பறி வழக்கில்4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
வழிப்பறி வழக்கில் 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பணகுடி, 

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள புளியங்குடியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 26). இவர் கடந்த 2014-ம் ஆண்டு பணகுடி பகுதியில் நடந்த வழிப்பறி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறக்கப்பட்டது.

இந்த நிலையில் பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிராஜன் மற்றும் போலீசார் பணகுடி பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார். போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர் வழிப்பறி வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அய்யப்பன் என்பது தெரியவந்தது. இதையடுத்து பணகுடி போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அய்யப்பன் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. காதலை ஏற்காததால் ஆத்திரம்: இளம்பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபர் கைது
காதலை ஏற்காததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் இளம்பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு அவதூறு கருத்துக்களை பரப்பினார். அவரை போலீசார் கைது செய்தனர்.
2. போலீஸ் அதிகாரி போல் நடித்து பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்த வாலிபர் கைது
போலீஸ் அதிகாரி போல் நடித்து பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3. அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் வாலிபர் கைது
அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. அஞ்செட்டி அருகே நிலத்தகராறில் ஓய்வு பெற்ற கிராம ஊழியர் அடித்துக் கொலை வாலிபர் கைது
அஞ்செட்டி அருகே நிலத்தகராறில் ஓய்வு பெற்ற கிராம ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. மதுபாட்டில்கள் திருடிய வாலிபர் கைது
ராமநாதபுரத்தில் நள்ளிரவில் மதுக்கடையை உடைத்து 437 மதுபானபாட்டில்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...