2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை மீண்டும் இன்று கூடுகிறது
2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை இன்று(திங்கட் கிழமை) மீண்டும் கூடுகிறது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி பெலகாவி சுவர்ண சவுதாவில் கூடியது. இந்த கூட்டம் 5 நாட்கள் நடைபெற்றது. சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை மீண்டும் இன்று(திங்கட் கிழமை) பெலகாவி சுவர்ண சுவுதாவில் கூடுகிறது.
இந்த கூட்டத்தொடர் வருகிற 21-ந் தேதி வரை நடக்கிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) பெலகாவியில் சித்தராமையா தலைமையில் நடக்கிறது. சித்தராமையா ஆட்சியில் ரூ.35 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக பா.ஜனதா ஏற்கனவே குற்றம்சாட்டியது. அந்த பிரச்சினையை சட்ட சபையில் எழுப்ப பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
முதல்-மந்திரி குமாரசாமி இன்று சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
இதற்காக குமாரசாமி இன்று காலை 7 மணிக்கு தனி விமானம் மூலம் போபால் செல்கிறார். அங்கு பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு, ராஜஸ்தானுக்கு செல்கிறார்.
இரு விழாக்களையும் முடித்துவிட்டு, அவர் மாலையில் பெங்களூரு திரும்புகிறார். கா்நாடக சட்டசபை கூட்டத்தில் நாளை(செவ்வாய்க் கிழமை) அவர் கலந்து கொள்கிறார்.

Related Tags :
Next Story