தியாகதுருகம், திருக்கோவிலூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தியாகதுருகம், திருக்கோவிலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டாச்சிமங்கலம்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து, தியாகதுருகம் பஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தியாகதுருகம் தெற்கு ஒன்றிய செயலாளர் கலையமுதன் தலைமை தாங்கினார். மாநில தொண்டரணி செயலாளர் பாலு, மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் பரசுராமன், பாசறை மாவட்ட அமைப்பாளர் பிரபு, மாவட்ட விவசாயி அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நகர செயலாளர் இடிமுரசு, நகர பாசறை செயலாளர் ஏழுமலை, நிர்வாகிகள் ஆனந்த், சந்திரசேகர், ராஜா, சீனு, பிரகாஷ், அம்பேத்கர், செல்லமுத்து, பாசறை வேலு, மணி, பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டு எச்.ராஜாவை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதேபோல் எச்.ராஜாவை கண்டித்து திருக்கோவிலூர் 4 முனை சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொகுதி செயலாளர் வீரவிடுதலை செல்வன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் சிவா, தர்மலிங்கம், முருகேசன், தொகுதி இணை செயலாளர் வீரவளவன், சக்திதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் செந்தில் வரவேற்று பேசினார். மாநில கொள்ளை விளக்க அணி துணை செயலாளர் தமிழ்நிலவன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் வெற்றி, இளம்சிறுத்தை பாசறை மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் சிவராஜ், காசிநாதன், கார்த்தி, சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டு எச்.ராஜாவை கண்டித்து கோஷம் எழுப்பினர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ரவி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story