உயிரியல் பூங்காவில் ஊழியர்கள் வேலை


உயிரியல் பூங்காவில் ஊழியர்கள் வேலை
x
தினத்தந்தி 17 Dec 2018 1:45 PM IST (Updated: 17 Dec 2018 1:45 PM IST)
t-max-icont-min-icon

தேசிய உயிரியல் பூங்காக்களில் மல்டி டாஸ்கிங் ஊழியர் பணிக்கு 180 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய வன உயிரியல் பூங்காக்கள் செயல்படுகின்றன. தற்போது புதுடெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில், ‘மல்டி டாஸ்கிங் ஸ்டாப்’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘குரூப்-சி’ பிரிவின் கீழ் வரும் இந்த பணிகளுக்கு மொத்தம் 180 பேர் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. டிக்கெட் கலெக்டர், பூங்கா காவலர், பூங்கா வழிநடத்துனர், அட்டன்டன்ட், கேங்மேன், பியூன் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணி வாரியான காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள். ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் The Ministry of Environment, Forest, and Climate Change, National Zoological Park, New Delhi என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் 6-1-2019-ந் தேதியாகும்.

இதுபற்றிய விவரங்களை www.envfor.nic.in என்று இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story