மாவட்ட செய்திகள்

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - டிப்ளமோ என்ஜினீயரிங் தகுதி + "||" + Employmentin ONGC Company - Diploma Engineer qualification

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - டிப்ளமோ என்ஜினீயரிங் தகுதி

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு  - டிப்ளமோ என்ஜினீயரிங் தகுதி
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 566 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிறுவனம் சுருக்கமாக ஓ.என்.ஜி.சி. என அழைக்கப்படுகிறது. முன்னணி பொதுத்துறை நிறுவனமான இதில் தற்போது டெக்னீசியன், ஜூ‌னியர் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 422 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக அசிஸ்டன்ட் டெக்னீசியன் (புரொடக்சன் பணிக்கு 108 இடங்களும், ஜூ‌னியர் அசிஸ்டன்ட் (பி அண்ட் ஏ) பணிக்கு 31 இடங்களும், ஜூனியர் ரஸ்அபவுட் பணிக்கு 42 இடங்களும் உள்ளன. சிமென்டிக், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளிலும் அசிஸ்டன்ட் டெக்னீசியன் பணிக்கு கணிசமான இடங்கள் உள்ளன.


இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்...

வயது வரம்பு

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 35 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு பணி உள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், பெட்ரோலியம், கெமிக்கல், ஆட்டோமொபைல் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், வேதியியல் முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு முடித்து, பிட்டிங், மெஷினிங், தீயணைப்பு பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.

கட்டணம்

விண்ணப்பதாரர்கள் ரூ.370 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை


விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 1-1-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். ஜனவரி இறுதி வாரத்தில் இதற்கான கணினி அடிப்படையிலான தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

115 இடங்கள்


மற்றொரு அறிவிப்பின்படி இந்த நிறுவனத்தில் ஜூ‌னியர் அசிஸ்டன்ட், மெடிக்கல் அசிஸ்டன்ட், சூப்பிரவைசர் போன்ற பணிகளுக்கு 115 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிப்ளமோ என்ஜினீயரிங், பார்மசி, ஆப்டோமெட்ரி டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன.

பட்டப்படிப்புடன், கணினி அறிவு பெற்றவர்கள், பி.எஸ்சி. வேதியியல், ஜியாலஜி படித்தவர்களுக்கும், 10-ம் வகுப்பு படித்தவர்கள், டிரைவிங் லைசென்சு பெற்றவர்களுக்கும் குறிப்பிட்ட பணிகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரத்தை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் டிசம்பர் 27-ந் தேதியாகும். இதற்கான தேர்வு வருகிற பிப்ரவரி மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இவை பற்றிய விரிவான விவரங்களை www.ongcindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

1. இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 2255 வேலை வாய்ப்புகள் : நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 255 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நர்சிங், பார்மசி உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளை படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:-
2. தமிழகத்தில் 580 உதவி வேளாண்மை அதிகாரி பணிகள்
தமிழகத்தில் உதவி வேளாண்மை அதிகாரி பணிக்கு 580 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
3. ரெயில்வேயில் 14,033 பணிகள்
ரெயில்வே துறையில் ஜூனியர் என்ஜினீயர், டெப்போ மெட்டீரியல் சூப்பிரண்டன்ட், கெமிக்கல் அண்ட் மெட்டலர்ஜிகல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப ரெயில்வே தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) விண்ணப்பம் கோரி உள்ளது.
4. ரெயில்வே பாதுகாப்பு படையில் 798 பணிகள்
ரெயில்வே பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணிக்கு 798 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
5. பெல் நிறுவனத்தில் 672 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் : ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம்
பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக ‘பெல்’ என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி உள்பட நாடுமுழுவதும் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்படுகின்றன.