கப்பல்கட்டும் தளத்தில் 798 பணியிடங்கள்


கப்பல்கட்டும் தளத்தில் 798 பணியிடங்கள்
x
தினத்தந்தி 17 Dec 2018 3:19 PM IST (Updated: 17 Dec 2018 3:19 PM IST)
t-max-icont-min-icon

கப்பல்கட்டும் தளத்தில் 798 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் கட்டும் தளங்களில் ஒன்று ‘மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்’. மும்பையில் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது டெக்னிக்கல் ஸ்டாப், ஆபரேட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 798 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அதிகபட்சமாக கம்போசிட் வெல்டர் பணிக்கு 228 பேரும், எலக்ட்ரீசியன் பணிக்கு 44 பேரும், ஸ்ட்ரக்சரல் பேப்ரிகேட்டர் பணிக்கு 187 பேரும், யூடிலிட்டி ஹேண்ட் பணிக்கு 141 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிட்டர், மெஷினிஸ்ட், ஜூனியர் பிளானர், டிரைவர், ஸ்டோர்கீப்பர், சேப்டிஇன்ஸ்பெக்டர் உள்ளிட்ட இதர பணிகளுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:-

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 1-11-2018-ந் தேதியில் 18 வயது நிரம்பியவராகவும், 38 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி

8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் பணியிடங்கள் உள்ள குறிப்பிட்ட தொழிற்பயிற்சி பிரிவில் என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறமைத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கப்பல்கட்டும் தளத்தில் பணி அனுபவம் பெற்றவர்களுக்கு 20 சதவீதம் சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். டிசம்பர் 24-ந்தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் பட்டியல் டிசம்பர் 28-ந்தேதி வெளி யிடப்படும். தேர்வு தேதி விவரம் பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mazdock.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Next Story