மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காரில் எழுந்த ‘பீப்’ சத்தத்தால் வெடிகுண்டு பீதி


மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காரில் எழுந்த ‘பீப்’ சத்தத்தால் வெடிகுண்டு பீதி
x
தினத்தந்தி 18 Dec 2018 4:30 AM IST (Updated: 18 Dec 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காரில் எழுந்த ‘பீப்’ சத்தத்தால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.

ஆலந்தூர்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள்நாட்டு முனையம் வருகை பகுதி எதிரே கார்கள் நிறுத்துமிடம் உள்ளது. இங்கு கடந்த 3 தினங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு காரில் இருந்து நேற்று திடீரென ‘பீப்’ சத்தம் கேட்டது. தொடர்ந்து அந்த சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

இதைக்கண்ட பாதுகாப்பு ஊழியர்கள் வெடிகுண்டு இருக்குமோ என்று மத்திய தொழிற்படை போலீசாருக்கு தகவல் தந்தனர். வெடிகுண்டு நிபுணர்களுடன் தொழிற்படை போலீசார் வந்து பீப் சத்தம் எழுந்த காரை சோதனை செய்தனர்.

நீண்ட நேரத்திற்கு பின் வெடிகுண்டு எதுவுமில்லை என தெரியவந்தது. காரில் இருந்த பேட்டரில் பழுது காரணமாக சத்தம் எழுவதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கார் மெக்கானிக் வரவழைக்கப்பட்டு சத்தம் வருவது நிறுத்தப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story