ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி விருத்தாசலத்தில், அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி  விருத்தாசலத்தில், அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2018 11:45 PM GMT (Updated: 17 Dec 2018 10:33 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி விருத்தாசலத்தில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

மக்கள் அதிகாரம் அமைப்பினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் விடுதலை, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், சட்டமன்றத்தை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முருகன், அருள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மணியரசு, இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிருஷ்ணன், மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் ராமர், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி தனவேல், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் புஷ்பதேவன், பகுஜன் சமாஜ் கட்சி அருள் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

Next Story