மும்பை அரசு ஆஸ்பத்திரியில் பயங்கர தீ 6 நோயாளிகள் பரிதாப சாவு 141 பேர் காயத்துடன் மீட்பு
மும்பை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 141 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர்.
மும்பை,
மும்பையில் பரபரப்பான அந்தேரி மரோல் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான ‘காம்கார்’ என்ற தொழிலாளர் நல மருத்துவமனை உள்ளது. 5 மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
நேற்று மாலை 4 மணியளவில் மருத்துவமனையின் 4-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. இதன் காரணமாக அதிகளவில் கரும்புகை வெளியேறி கொண்டிருந்தது. சிறிது நேரத்திலேயே மருத்துவமனை பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.
தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் பதறிபடி ஓட்டம் பிடித்தனர்.
மருத்துவமனை மாடிகளில் உள்ள வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த உள்நோயாளிகளும் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கினார்கள்.
நோய் தீவிரம் காரணமாக எழுந்திருக்கவும், நடக்கவும் முடியாத நிலையில், படுக்கைகளில் பல நோயாளிகள் கிடந்தனர். அவர்கள் தங்களை காப்பாற்றும்படி கூச்சல் போட்டனர். புகையின் காரணமாக நோயாளிகள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனால் தப்பிக்க வழி தெரியாமல் அவர்கள் பரிதவித்தனர். உயிரை கையில் பிடித்துக்கொண்டு உதவி கேட்டு கதறினர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் வாகனங்களில் விரைந்து வந்தனர்.
கரும்புகை கக்கியபடி தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனால் தீயணைப்பு படையினருக்கு தீயை அணைக்கும் பணி சவாலாக இருந்தது. தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினார்கள். 12 வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தன.
தீயணைக்கும் பணி ஒருபுறம் தீவிரமாக நடக்க மறுபுறம் ராட்சத கிரேன் மற்றும் கயிறு ஏணிகள் மூலம் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டனர்.
பலரை அவர்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது, கயிறு ஏணியை பிடித்து கொண்டு கீழே இறங்க முயன்ற ஒருவர் கைப்பிடி தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்தநிலையில், தீயணைப்பு படையினர் ஆஸ்பத்திரிக்குள் இருந்து ஏராளமானோரை மீட்டனர்.
இவர்களில் பலர் தீக்காயம் அடைந்து இருந்தனர். மற்றவர்கள் புகையில் சிக்கி மூச்சு திணறி மயங்கிய நிலையில் இருந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் ஆம்புலன்சுகள் மூலம் கூப்பர், செவன்ஹில்ஸ் உள்பட 5 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு நடத்திய பரிசோதனையில் இவர்களில் 6 நோயாளிகள் பலியானது தெரியவந்தது. இதில் 2 வயது குழந்தையும் அடங்கும். பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களது உடல்கள் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.
100-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உயிர் பலி அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும் டாக்டர்கள், செவிலியர்கள், நோயாளிகள், பார்வையாளர்கள் என 108 பேரை பத்திரமாக தீயணைப்பு படையினர் மீட்டனர்.
இதற்கிடையே 4 மணி நேரம் போராடி வீரர்கள் தீயை அணைத்தனர். பின்னர் கட்டிடத்தை குளிர்விக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆஸ்பத்திரியில் வேறு யாரும் சிக்கி இருக்கிறார்களா என்று இரவில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட அரசு மருத்துவமனை உள்ள சாலைகளில் வேடிக்கை பார்ப்பதற்காக அதிகளவில் மக்கள் திரண்டு இருந்தனர். இதன் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் உண்டாகி வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story