கிராம தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் பணிமாறுதல் வரையறையை தளர்த்த கோரிக்கை
பணிமாறுதல் வரையறையை தளர்த்த கோரி 2–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கிராம தபால் ஊழியர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
அகில இந்திய கிராம தபால் ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2–வது நாளாக நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர்கள் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு கோட்ட தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். கோட்ட பொருளாளர் கருப்புசாமி, செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், கமலேஷ்சந்திரா தலைமையிலான குழு அறிக்கையின் பரிந்துரைகள் அனைத்தையும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். பணிக்கொடை உச்சவரம்பை ரூ.1½ லட்சத்தில் இருந்து ரு.5 லட்சமாக மாற்றி அமைக்க வேண்டும்.
பணிமாறுதல் வரையறை தளர்த்தப்பட வேண்டும். விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு ஊதிய குறைப்பு செய்யக்கூடாது. ஊதியக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட 3 வகையிலான விருப்ப ஓய்வு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆண்டுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தஞ்சை கோட்டத்தில் தலைமை தபால் நிலையம், கிளை தபால் நிலையங்கள் என 294 தபால் நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்களில் கிராம தபால் ஊழியர்கள் 494 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 107 பேர் மட்டும் நேற்று பணிக்கு வந்திருந்தனர். 387 பேர் பணிக்கு வரவில்லை.
கிராம தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக பணப்பட்டுவாடா, தபால் சேவைகள் உள்ளிட்ட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

Related Tags :
Next Story