குமாரபாளையம் அருகே மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: கண்களில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


குமாரபாளையம் அருகே மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: கண்களில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2018 3:45 AM IST (Updated: 20 Dec 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் அருகே மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

குமாரபாளையம்,

மத்திய அரசின் சார்பில், விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு பதிலாக சாலையோரங்களில் புதை வடகம்பிகளை பதிக்கும் திட்டத்தை செயல் படுத்திட வலியுறுத்தியும், ஏற்கனவே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பிற்கேற்ப முறையான இழப்பீடு, வருட வாடகை வழங்கிட வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மற்றும் சேலம் மேற்கு மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு கவுண்டனூர் பகுதியில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த 3-வது நாள் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பந்தலுக்கு முன்பு நின்று கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

இதில், நாமக்கல் மாவட்ட விவசாய சங்க செயலாளர் பெருமாள் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நேற்று பா.ம.க. வைச்சேர்ந்த மாவட்ட நிர்வாகி அண்ணாதுரை, பெரியார் தி.க.வை சேர்ந்த உமாசங்கர், கொங்கு ராசாமணி உட்பட பலர் வாழ்த்தி பேசினர்.

Next Story