வானூர் அருகே தொழிலாளியை கொல்ல முயன்ற வாலிபர் கைது


வானூர் அருகே தொழிலாளியை கொல்ல முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2018 3:45 AM IST (Updated: 20 Dec 2018 11:42 PM IST)
t-max-icont-min-icon

வானூர் அருகே தொழிலாளியை கொல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்,

ஆரோவில்லை அடுத்த இடையன்சாவடியை சேர்ந் தவர் கண்ணதாசன் (வயது 63), கட்டிட தொழிலாளி. இவருக்கும், இவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜோதி (28) என்பவருக்கும் இடையே குப்பை கொட்டுவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.

இதுதொடர்பாக கடந்த 18-ந் தேதி இரவு ஏற்பட்ட தகராறில் கண்ணதாசன் மீது ஜோதி மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ராமு, ரங்கன் ஆகியோர் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதில் காயமடைந்த கண்ணதாசன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஜோதி, ராமு, ரங்கன் ஆகியோர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் வானூர் பகுதியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற ஜோதியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ராமு, ரங்கன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story