மானாமதுரை, காரைக்குடியில் கிறிஸ்துமஸ் விழா


மானாமதுரை, காரைக்குடியில் கிறிஸ்துமஸ் விழா
x
தினத்தந்தி 21 Dec 2018 3:30 AM IST (Updated: 21 Dec 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை, காரைக்குடியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

மானாமதுரை,

மானாமதுரை வான்புரம் கிராமத்தில் மாதா கல்வி நிறுவனங்களின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. விழாவிற்கு மாதா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் நிதியாளர் ஜெயபாக்கியம் அனைவரையும் வரவேற்றார். சிவகங்கை மருத்துவ கல்லூரி டீன் வனிதா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விழாவை முன்னிட்டு கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டிருந்தது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கிறிஸ்துமஸ் பாடல்களை பாடினர். கிறிஸ்துமஸ் நற்செய்தியை போதகர் ஜாம் ஜெயக்குமார் வாசித்தார். மாதா மருத்துவமனை மருத்துவ அலுவலர் நான்சி சாராள் மேரி நன்றி கூறினார்.

காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. குளோபல் சர்ச் பாஸ்டர் ஜான்சன் தலைமையில் விழா நடைபெற்றது. இதில் நல்லாசிரியர் விருது பெற்ற, பள்ளி முன்னாள் முதல்வர் வில்லியம் துரைராசு, எஸ்.எம்.எஸ். பள்ளி முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் ஹென்றி பாஸ்கர் மற்றும் பள்ளியின் முதன்மை முதல்வர் நாராயணன், பள்ளி செயலர் கார்த்திக், பள்ளி முதல்வர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர். இதில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து பாடல்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Next Story