மேகதாது அணை கட்டும் பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும்
மேகதாது அணை கட்டும் பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
திருச்சி,
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் நல்லசாமி தலைமை தாங்கினார். காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் தீட்சிதர் பாலசுப்பிரமணியம், செயற்குழு உறுப்பினர் ஹேமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்ய முயற்சிகள் மேற்கொள்வது என்றும், விவசாயிகளிடம் நெல்கொள்முதல் செய்யும் அதிகாரிகள் கையூட்டு எதிர்பார்க்கிறார்களா? என்றும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்ட முடிவில் மாநில செயலாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு என எதையும் இதுவரை கர்நாடக அரசு மதித்து நடக்கவில்லை. இது நாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் விடப்பட்ட சவால் ஆகும். தினமும் நீர்பங்கீடு என்ற இலக்கை நோக்கி தமிழக அரசு வழக்கை கொண்டு சென்று தீர்ப்பை பெற்றிருந்தால் நடப்பு ஆண்டு குறுவை சாகுபடி நடந்திருக்கும்.
காவிரியின் உபரிநீரை ஏரி, குளம், குட்டை, கண்மாய்களுக்கும், இதர ஆறுகளுக்கும் கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் நடப்பு ஆண்டில் உபரிநீர் கடலுக்கு சென்றிருக்காது. மேகதாதுவில் அணை கட்டும் எண்ணமும் கர்நாடக அரசுக்கு வந்திருக்காது. அதே வேளையில் மேகதாதுவில் அணை கட்டும் திட்டமானது தமிழகத்திற்கு நன்மை பயக்கும் திட்டம் என்று கர்நாடக மந்திரி பேசி இருப்பது குழப்பும் எண்ணம் கொண்டது மட்டுமல்ல திட்டமிட்ட சதி. எனவே, இது பற்றி விவாதிக்க தமிழ்நாடு அரசு உடனடியாக பாசனப் பயனாளிகள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்திட வேண்டும். தீர்ப்பை திருத்தக்கோரும் மறுசீராய்வு மனுவும், உபரிநீரை பயன்படுத்தும் திட்டங்களுமே இதற்கு தீர்வு.
காவிரியில் தமிழ்நாடு அரசு கடைமடை உரிமை பெற்றிருக்கும் மாநிலம். சர்வதேச சட்டப்படி தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை. இந்திய கூட்டமைப்பில் தமிழ்நாடு இல்லாமல் தனிநாடாக இருந்திருந்தால், கடைமடை உரிமையை சர்வதேச சட்டப்படி மீட்டிருக்க முடியும். கடந்த பல ஆண்டுகளாகவே கர்நாடகம், தமிழ்நாட்டை காவிரியின் வடிகாலாகவே வைத்திருக்கிறது.
எனவே மேகதாது அணை பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story